சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஸ்கூல் செல்லும் பையன் இருக்கிறான் என்பதை மறைத்து மனோஜை திருமணம் செய்துகொண்டு வீட்டுக்குள் வந்திருக்கிறார். அந்த உண்மையை மறைக்க அவர் பல மோசடியான வேலைகளை செய்து வருகிறார்.
பல முறை அவர் சிக்காமல் தப்பி இருக்கிறார். இந்த முறை அவருக்கு ஒரு புது சிக்கல் வந்திருக்கிறது.
அடுத்த வார ப்ரொமோ
அக்கவுன்டன்ட் வேலைக்காக முத்துவின் அப்பா ஒரு பள்ளிக்கு செல்கிறார். அந்த பள்ளி ரோகிணியின் மகன் படிக்கும் பள்ளி தான்.
மகனை பள்ளிக்கு அழைத்து சென்று விட வந்த ரோகிணி அங்கு மாமனார் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். உடன் முத்துவும் அங்கே வருகிறார். அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்க அவர் மறைந்துகொள்கிறார்.
இந்த முறையாவது ரோகிணி சிக்குவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.