சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் தொலைக்காட்சி விருதுகளில் கூட சிறந்த நடிகர், நடிகை, சிறந்த மாமியார், சிறந்த சீரியல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.
இந்த சீரியலில் தற்போது முத்து – மீனா இருவரும் ரோஹிணியின் மகனை தத்தெடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
ப்ரோமோ இதோ
இந்த நிலையில் செம ட்விஸ்ட்டாக ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், தொழிலதிபராக இருக்கும் மனோஜிற்கு கடிதம் ஒன்று வருகிறது. அந்த கடிதத்தில் நீ தற்கொலை செய்து கொள்வாய் என எழுதப்பட்டுள்ளது.
இதை படித்துவிட்டு மனோஜ் அதிர்ச்சியில் அந்த நபரை தேடி அழைக்கிறார். இது தான் வரும் வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கபோகிறது. அதுகுறித்து வெளிவந்த ப்ரோமோ வீடியோ இதோ..