Saturday, March 15, 2025
Homeசினிமாசிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன்...

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்… நடிகை சுஜாதா ஓபன் டாக்


சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை தொடங்கிய நாள் முதல் முத்து-மீனாவிற்கு ஏதாவது வில்லன் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

முத்துவிற்கு டிராபிக் போலீஸ் இப்போது வில்லனாக இருக்கிறார், எப்போது சான்ஸ் கிடைக்கும் பழிவாங்கலாம் என இருக்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் தொழிலை கெடுக்கும் வில்லியாக சிந்தாமணி உள்ளார்.

இந்த வார கதைக்களத்தில் அவர் ஏற்படுத்திய நஷ்டத்தை மீனா எப்படி சமாளிக்க போகிறார் என்பது தெரியவில்லை.

சிந்தாமணி

இந்த தொடரில் சிந்தாமணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார் நடிகை சுஜாதா.

இவர் ஒரு பேட்டியில் பேசும்போது, ஈசன் படத்தில் வந்தாலும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வந்து குறைந்து நாட்களிலேயே நான் எல்லோருக்கும் பரீட்சயம் ஆகிவிட்டேன். குறைந்த எபிசோடுகளில் நடித்தாலும் மக்களை என்னை அடையாளம் காண்கின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் | Sujatha About Acting In Siragadikka Aasai Serial

மீனாவை ஏன் இப்படி பாடாய் படுத்துகிறாய் என்கின்றனர். எனக்கு தெரிந்த ஒருவர் இறந்துவிட்டார், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்றேன்.

அப்போது ஒரு சின்ன பையன் என்னிடம் வந்து இந்தா பாருங்க சிந்தாமணி நீங்க மீனாவை ரொம்ப சீண்டி பாக்குறீங்கள், இது சரியில்லைனு சொல்லிட்டு போனான்.

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் | Sujatha About Acting In Siragadikka Aasai Serial

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன், ஒரு சின்ன பையன் கூட என்னை நியாபகம் வைத்து கேள்வி கேட்டதும் சிரிப்புதான் வந்தது.

அந்த அளவிற்கு சிறகடிக்க ஆசை சீரியல் ரீச் ஆகியிருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சிதான் என சுஜாதா தெரிவித்துள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments