Monday, April 21, 2025
Homeசினிமாசிறப்பு பட்டிமன்றம் முதல் புத்தம் புதிய திரைப்படம் வரை.. ஜீ தமிழின் தீபாவளி ஸ்பெஷல் என்னென்ன?...

சிறப்பு பட்டிமன்றம் முதல் புத்தம் புதிய திரைப்படம் வரை.. ஜீ தமிழின் தீபாவளி ஸ்பெஷல் என்னென்ன? முழு விவரம் இதோ


தமிழ் சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திலும் மற்ற சேனல்களுக்கு ஃடப் கொடுத்து மக்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் நாளுக்கு நாள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதே நேரத்தில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் வித்தியாசமான நிகழ்ச்சிகள், சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றம், புத்தம் புதிய திரைப்படங்கள் மூலமாக மக்களை மகிழ்விக்க தவறுவதில்லை.


அந்த வகையில் இந்த தீவாளியையும் ஜீ தமிழுடன் இணைந்து சரவெடி கொண்டாட்டமாக செலிபிரேட் செய்ய தயாராகுங்கள். காலையில் சிறப்பு பட்டிமன்றத்துடன் தொடங்கி மாலை வரை என்னனென்ன ஸ்பெஷல் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


காலை 8 மணிக்கு சொல்வேந்தர் கலைமாமணி சுகி சிவம் தலைமையில் டாக்டர் ஸ்யாமளா, பழனி, உமா பாரதி, சாந்தமணி, பர்வீன் சுல்தான் மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் பங்கேற்கும் “வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றுவது தாயா? தந்தையா?” என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

அதை தொடர்ந்து 9:30 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ” ரகு தாத்தா ” என்ற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு சரிகமப சீசன் 4 போட்டியாளர்கள் ஒன்றிணையும் “சரிகமப வெற்றி கொண்டாட்டம்” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.


மேலும் மதியம் 3 மணிக்கு நயன்தாரா நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற “அன்னபூரணி” திரைப்படம் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்தளிக்க உள்ளது.

அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி மக்களை கவர்ந்த திகில் திரில்லர் திரைப்படமான ” டிமான்டி காலனி 2 ” இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக நம்பாது ஜீ தமிழில் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.


எனவே காலை முதல் மாலை வரை என ஜீ தமிழின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த தீபாவளியை உங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட தயாராகுங்கள்.

  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments