டாப் நடிகை
பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் வழக்கமாக பதிவிட்டு வருகிறோம்.
சில பிரபலங்களின் போட்டோஸ் செம கியூட்டாக, அப்படியே தூக்கி கொஞ்ச வேண்டும் போல் இருக்கும், யார் என்பது தெரிந்துவிடும்.
ஆனால் சில பிரபலங்களின் போட்டோஸ் யார் என்றும் கண்டுபிடிக்க முடியாது, சிலர் முறைப்பது போலவும், அழுவது போலவும் எல்லாம் இருக்கும்.
அப்படி இப்போது ஒரு நடிகையின் கியூட்டான போட்டோ வந்துள்ளது, அதில் அந்த நாயகி சிரித்தபடி உள்ளார்.
யார் அவர்
இவர் தமிழில் தனுஷின் படம் மூலம் அறிமுகமானார், முதல் படமே செம ஹிட்டாக அமைந்தாலும் அவருக்கு தமிழில் சரியான படங்கள் அமையவில்லை. ஆனால் ஹிந்தியில் இவரது மார்க்கெட் டாப் கியரில் உள்ளது.
அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்த நடிகை யார் தெரியுமா, அண்மையில் தனது நீண்டநாள் காதலரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்துகொண்ட டாப்ஸி தான்.