பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் கலக்கும் பிரபலங்களை பற்றி எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
அப்படி தான் கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. நிறைய பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் பார்த்தாலே ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.
ஆனால் ஒருசில பிரபலங்களின் சிறுவயது போட்டோ பார்க்கும் போது அவர்கள் யாரென்றே தெரியாது. இப்போதும் ஒரு பிரபல நடிகரின் சிறுவயது போட்டோ தான் வைரலாகி வருகிறது.
யார் இவர்
இந்த நடிகர் மிகப்பெரிய அரசியல் மற்றும் சினிமா பின்னணியில் இருந்து நடிக்க வந்தவர். 2010ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் இதுவரை 18 படங்கள் நடித்துள்ளார்.
வருடத்திற்கு ஒரு படம் கொடுத்துவிட வேண்டும் அப்போது தான் மக்கள் தன்னை நியாபகம் வைத்துக் கொள்வார்கள் என பலர் நினைக்கும் இந்த காலத்தில் சிறந்த கதை உள்ளதா பல வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை தரமான படத்தை கொடுப்போம் என படங்கள் தேர்வு செய்து நடித்து வருபவர்.
அவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகர் அருள்நிதி தான், அண்மையில் இவர் நடித்த டிமான்டி காலனி 2 படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பியது.