பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு மீரா ஜாஸ்மின், பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் படத்தில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் இந்த நடிகை.
அதன்பின் ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தில் நடித்தவர் அப்படியே பல வருடங்களுக்கு பிறகு மலையாள படத்தில் நடித்தார், அப்படம் அவருக்கு எவ்வளவு பெரிய ரீச் கொடுத்தது என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும்.
டான்ஸர், நடிகை என்பதை தாண்டி இவர் டாக்டருக்கு படித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார்.
யார் இவர்
இவ்வளவு விவரங்களை படித்ததுமே யார் இந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரிய வந்திருக்கும். ஆமாம் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை வேறு யாரும் இல்லை நடிகை சாய் பல்லவி தான்.
தந்தை பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.