Monday, April 21, 2025
Homeசினிமாசிறையில் அடைக்கப்பட்ட பிக் பாஸ் தர்ஷன்.. இப்போது வந்த புதிய உத்தரவு

சிறையில் அடைக்கப்பட்ட பிக் பாஸ் தர்ஷன்.. இப்போது வந்த புதிய உத்தரவு


இலங்கையை சேர்ந்த பிரபல மாடல் தர்ஷன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். அந்த புகழ் மூலமாக தற்போது தமிழ் சினிமா படங்களில் அவர் நடித்து வருகிறார்.

சென்னையில் தங்கி இருக்கும் அவர் வீட்டின் முன்னால் சிலர் கார் பார்க் செய்ததை தட்டி கேட்டபோது இரண்டு தரப்புக்கும் நடுவில் கைகலப்பு ஏற்பட்டது.

நீதிபதியின் மகன் தான் தர்ஷன் உடன் கைகலப்பு செய்தது. இரண்டு தரப்பும் மாறி மாறி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து இருந்தனர். நீதிபதியின் மகன் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ் தர்ஷனை உடனே கைது செய்து சிறையில் அடைத்தது.

ஆனால் தர்ஷன் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிபதியின் மகன் மீது கைது நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை. விசாரணை மட்டும் நடத்துவதாக சொல்கிறார்கள்.


ஜாமீன்

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பிக்பாஸ் தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் லோகேஷ் என இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அவர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி இருக்கிறது.

அதனால் தற்போது சென்னை புழல் சிறையில் இருந்து அவர்கள் வெளியில் வந்திருக்கின்றனர்.
 

சிறையில் அடைக்கப்பட்ட பிக் பாஸ் தர்ஷன்.. இப்போது வந்த புதிய உத்தரவு | Bigg Boss Tharshan Gets Bail In Parking Issue

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments