சில்க் ஸ்மிதா
தமிழ் மட்டுமில்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுலக்ஷனா.
தூரல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியானவர் தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, ராஜதந்திரம், வைகாசி பொறந்தாச்சு, சின்னதம்பி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் இப்போது சின்னத்திரையிலும் அம்மாவாகவும், மாமியாராகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகையின் பேட்டி
இவர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் நடிகை சுலக்ஷனா ஒரு பேட்டியில், சில்க் ஸ்மிதா மிகவும் பாசமான பெண், அவங்க நடித்த கதாபாத்திரத்திற்கு அவருடைய நிஜ கேரக்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது.
சில்க் என்னிடம் நான் தான் உங்க கணவரை முதலில் லவ் பண்ணேன், ஆனா நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்க அப்படினு சொல்வாங்க. நானும் சரி நான் அப்படியே இருந்துகிறேன் நீ வேணா என் கணவரை லவ் பண்ணிக்கோ அப்படின்னு சொல்லி இருக்கிறேன்.
அதற்கு சில்க் வேண்டாம் என்று சொல்லிடுவாங்க, இது எனது கணவருக்கும் தெரியும். என்னிடமே என்னுடைய கணவர் பற்றி பேசும்போது எனக்கு தப்பா எடுக்கத் தோணாது என கூறியுள்ளார்.