சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அமரன் திரைப்படம் வெளிவரவுள்ளது. அக்டோபர் 31 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் பிரபல முன்னணி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதலில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், அவருக்கு பதிலாக இந்த கதை தற்போது சிவகார்த்திகேயனிடம் வந்துள்ளது.
சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த நேரத்தில் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தனர். ஆனால், தற்போது சூர்யா படத்திலிருந்து விலகிய நிலையில், இவர்களும் வெளியேறிவிட்டனர்.
இப்படியிருக்க இந்த கதாபாத்திரங்களில் நடிக்கப்போகும் நடிகர், நடிகை குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பி கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வா நடிக்கவுள்ளாராம். மேலும் நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
விரைவில் இப்படம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.