சிவகார்த்திகேயன்
விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிறகு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தில் முடித்த கையோடு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே. 23 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் வில்லனாக லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலாவின் போட்டோஷூட் பகுதி நிறைவடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
புறநானூறு படத்தில் முதலில் நாயகனாக நடிக்க சூர்யாவை தேர்வு செய்துள்ளார் சுதா கொங்கரா. ஆனால் சூர்யாவின் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார். சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணைந்து ஏற்கனவே சூரரைப்போற்று படத்தில் பணியாற்றி அந்த படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.