Friday, September 20, 2024
Homeசினிமாசிவகார்த்திகேயன்யுடன் மோதும் ஜெயம் ரவி! சபாஷ் சரியான போட்டி

சிவகார்த்திகேயன்யுடன் மோதும் ஜெயம் ரவி! சபாஷ் சரியான போட்டி


தீபாவளி பண்டிகை என்றாலே கண்டிப்பாக புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும். அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் தான் வரிசைகட்டி ரிலீஸ் ஆகும். அப்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்குள் அதற்கான போட்டி தற்போதே தொடங்கிவிட்டது.


இதைத்தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் படங்கள் இரண்டும் ஒரே நாளில் வெளியானால் அது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கும் என்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம் தான்.

அமரன்



தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்யுடன் மோதும் ஜெயம் ரவி! சபாஷ் சரியான போட்டி | Amaran And Brother Movies Clash On Deepavali 2024

கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகை அன்று வெளிவரும் என அறிவித்துவிட்டனர்.

பிரதர் 



இந்தநிலையில், தற்போது அதற்கு போட்டியாக ஜெயம் ரவி படம் ஒன்று களத்தில் குதித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்யுடன் மோதும் ஜெயம் ரவி! சபாஷ் சரியான போட்டி | Amaran And Brother Movies Clash On Deepavali 2024

மேலும் சீதா, சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், பூமிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில், எந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments