Wednesday, March 26, 2025
Homeசினிமாசிவகார்த்திகேயன் வளர்ச்சி பார்த்து பொறாமையா.. நடிகர் ஷாம் சொன்ன பதில்

சிவகார்த்திகேயன் வளர்ச்சி பார்த்து பொறாமையா.. நடிகர் ஷாம் சொன்ன பதில்


நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் பிரபலம் ஆகி அதன்பிறகு சினிமாவுக்குள் நுழைந்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார்.

அவர் கடந்த வருடம் நடித்த அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதன் மூலம் அவர் விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களுக்கே சவால் விடும் அளவுக்கு வளர்த்துவிட்டார் என பேசப்பட்டது.

அடுத்து அவர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மாதராசி மற்றும் சுதா கொங்கரா உடன் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பொறாமையா? ஷாம் பதில்

“சிவகார்த்திகேயன் போட்டியாளராக கலந்துகொண்ட நடன நிகழ்ச்சியில் ஷாம் நடுவராக இருந்தார். ஆனால் தற்போது SK அடைந்திருக்கும் உயரம் எவ்வளவு என பாருங்க என பலரும் சொல்கிறார்கள்.”


“அவரை பார்த்து எனக்கு பொறாமை எல்லாம் இல்லை. அவர் இவ்வளவு வளர்ந்து இருப்பது எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எல்லாமே கடவும் அமைத்து கொடுத்த பாதை தான்” என ஷாம் கூறி இருக்கிறார்.
 

சிவகார்த்திகேயன் வளர்ச்சி பார்த்து பொறாமையா.. நடிகர் ஷாம் சொன்ன பதில் | Not Jealous Of Sivakarthikeyan Growth Shaam

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments