பிரதர்
சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற பல படங்களை கொடுத்த எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளிவர உள்ள படம் பிரதர்.
இப்படத்தில் ஜெயம் ரவியுடன், பிரியங்கா மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், பிரமோஷன் பணிகளில் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
சிவா மனசுல சக்தி 2 – ம் பாகம்
இந்நிலையில், இயக்குனர் எம் ராஜேஷ் பேட்டி ஒன்றில் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் குறித்தும் சிவா மனசுல சக்தி படத்தை பற்றியும் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், “சிவா மனசுல சக்தி படத்தின் 2 – வது பாகத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், இது குறித்து, நடிகர் ஜீவாவிடமும் பேசியுள்ளதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
பிரதர் படத்தின் ரிலீஸ்க்கு பின் இந்த படம் குறித்த அப்டேட் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.
ஜீவா, சந்தானம், ஊர்வசி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்த சிவா மனசுல சக்தி திரைப்படம் இன்றும் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட் படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.