சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மிகவும் அழகான விஷயங்கள் காட்டப்பட்டுள்ளது.
அதாவது டிகிரி வாங்கிய விஷயத்தை சீதா, மீனா மற்றும் முத்துவிடம் கூறி சந்தோஷப்படுகிறார். இவர்கள் இருவரும் அண்ணாமலையிடம் கூற குடும்பத்தினர் அனைவரும் தெரிந்துகொண்டு வாழ்த்துகிறார்கள்.
ஆனால் வழக்கம் போல் மனோஜ் மற்றும் விஜயா மோசமாக பேசி முத்துவிடம் வாங்கிகட்டிக் கொள்கிறார்கள். முத்து-மீனா நேரில் சென்று சீதாவை வாழ்த்து கொண்டாடுகிறார்கள்.
அடுத்து மனோஜ் பணத்தால் சிக்கபோகும் ஒரு விஷயம் நடக்கிறது.
நாளைய புரொமோ
நாளைய எபிசோட் புரொமோவில் ரோஹினி தனது தோழியுடன் மருத்துவமனை செல்கிறார். அங்கு கர்ப்பமாக முயன்றும் எனக்கு எதுவும் நடக்கவில்லை, ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்கிறார் ரோஹினி.
அதற்கு வித்யா, உனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது, நீ தான் ஏற்கெனவே குழந்தை பெற்றுள்ளாயே என்கிறார். அடுத்த ஷாட்டில் அதே இடத்தில் சீதாவை காட்டுகிறார்கள், ஆனால் அவர் வித்யா சொன்னதை கேட்டிருப்பாரா என்பது தெரியவில்லை.
உடனே சீதா, மீனாவிற்கு போன் செய்து மருத்துவமனையில் நான் ரோஹினியை பார்த்தேன் என்கிறார். இதோ அந்த புரொமோ,