மகாராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை, நாம் அனைவரும் அறிவோம். இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சாச்சனா, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், அபிராமி, முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
வித்தியாசமான திரைக்கதை, கிளைமாக்ஸ் ட்விஸ்ட், விறுவிறுப்பான கதைக்களம் என படம் வேற லெவலில் இருந்தது. உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
வசூல்
இந்த நிலையில் தற்போது மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ப்ரீ புக்கிங், முதல் நாள் வசூல் சேர்த்து ரூ. 10 கோடி வரை மகாராஜா படம் வசூல் செய்துள்ளது. மேலும் இரண்டாம் நாள் ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கண்டிப்பாக மாபெரும் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.