மகாராஜா
நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் மகாராஜா.
பல வருடங்கள் ஒரு ஹிட் படத்திற்காக போராடி வந்த விஜய் சேதுபதி-க்கு மகாராஜா ஒரு மைல்கல் படமாக அமைந்தது.
வசூலாகவும் இப்படம் ரூ 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது.
இந்நிலையில் மகாராஜா சீனாவில் பிரமாண்டமாக ரிலிஸாக இப்படம் அங்கு ரூ 52 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக சீனாவில் இப்படம் ரூ 100 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.