அபிராமி
மாடலிங் துறையில் பயணத்தை தொடங்கி சினிமாவில் இப்போது சாதிக்கும் பெண்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி மாடலிங் பின் விளம்பரம் அப்படியே வெள்ளித்திரை என படிப்படியாக முன்னேறியவர் நடிகை அபிராமி.
எச்.வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
இப்படத்தில் நடித்தபின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் சில காதல் சர்ச்சைகளில் சிக்கினார். அதன்பின் சொல்லும் அளவிற்கு பெரிய படங்கள் எதுவும் அபிராமி நடிக்கவில்லை.
சின்னத்திரை
இந்த நிலையில் நடிகை அபிராமி வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா தொடரில் நடிகை அபிராமி நடிக்க கமிட்டாகியுள்ளாராம். ஆனால் அவர் தொடர் முழுவதும் வர கமிட்டானாரா அல்லது சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.