Thursday, March 27, 2025
Homeசினிமாசீரியலில் நடிப்பதை திடீரென நிறுத்தியது ஏன்?- மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகர் விஷ்வா ஓபன்...

சீரியலில் நடிப்பதை திடீரென நிறுத்தியது ஏன்?- மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகர் விஷ்வா ஓபன் டாக்


மெட்டி ஒலி

தமிழ் சின்னத்திரையில் மக்களை கவரும் வகையில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

சில சீரியல்கள் வர வேகமும் தெரியாமல் முடிந்துவிடுகிறது. ஆனால் 90 மற்றும் 20 ஆரம்பத்தில் வந்த சில தொடர்கள் இப்போதும் மக்களிடம் பேசப்படுகிறது.

அப்படி ஒரு காலத்தில் எல்லோரின் தொலைக்காட்சிகளில் ஓடிய ஒரு தொடர் என்றால் அது மெட்டி ஒலி தான்.

கடந்த 2002ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடரை திருமுருகன் அவர்கள் இயக்கியிருந்தார். அம்மா இல்லாத 5 சகோதரிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த தொடர் உருவாகி இருந்தது.


விஷ்வா


இந்த தொடரில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர் விஸ்வநாதன். ஹிட் சீரியலில் நடித்தவர் திடீரென சின்னத்திரையில் இருந்து காணாமல் போனார்.

அண்மையில் ஒரு பேட்டியில் விஸ்வநாதன் கூறுகையில், மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு இன்னொரு மெட்டி ஒலி வேண்டும் என நினைத்தேன். அட்லீஸ்ட் இன்னொரு மெட்டி ஒலி ஸ்டாண்டில் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

சீரியலில் நடிப்பதை திடீரென நிறுத்தியது ஏன்?- மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகர் விஷ்வா ஓபன் டாக் | Metti Oli Serial Vishwa About Why He Quit Serials

அதனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதல் இருந்து குறைத்துக் கொண்டேன். எல்லா சீரியலும் மெட்டி ஒலி ஆகும் என்று சொல்ல முடியாது, எல்லா சினிமாவும் பாகுபலி ஆக முடியாது.

அந்த மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன், அதோடு எனக்கு வேறு சில வேலைகளும் இருந்ததால் அதில கவனம் செலுத்தி இருந்தேன் என கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments