பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்ட் 2வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் வசந்த் வசி. இவர் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
இந்த நிலையில், தற்போது ஒரு பேட்டியில் அவர் எதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகினார் என்பதை பற்றி கூறினார்.
விலகியது ஏன்?
அதில், வசந்த் வசிக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும். தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும்.
இதற்காக தான் நான் இந்த சீரியலில் இருந்து விலகினேன் என்றும் கூறினார்.
மேலும் அவர், இதுதொடர்பாக நிறைய வதந்திகள் பரவி வருகின்றது. அது எதுவும் உண்மை இல்லை என்றும்
மீனாவிடமும், இல்லை ப்ரோடக்க்ஷன் பக்கமும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும்.
இது முழுக்க முழுக்க என் முடிவு தான் என்றும் கூறியுள்ளார் .
அதனை தொடர்ந்து, திரும்பி சீரியலில் நடிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு, இப்போது படத்தில் மட்டும் கவனம் செலுத்த போவதாகவும் சீரியலில் நடிக்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தார்.