சஞ்சீவ்
டாப் சீரியல் நடிகர்கள் லிஸ்ட் எடுத்தால் அதில் 5ல் வரக்கூடியவர் நடிகர் சஞ்சீவ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரில் நாயகனாக நடிக்க அந்த தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
அந்த தொடருக்கு பிறகு ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக வலம் வரும் சஞ்சீவ் இப்போது சன் டிவியின் கயல் தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டிஆர்பியில் டாப்பில் இருந்த கயல் தொடர் இப்போது 2, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
புதிய காதல்
பிரபலங்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி சமீபத்தில் பிரம்மாண்ட வீடு ஒன்று கட்டி குடிபோனார்கள். அவர்களின் வீட்டை சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் காட்யிருந்தோம், அவர்களும் தங்களது வீட்டில் என்னென்ன ஸ்பெஷல் என்பதை கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாவில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு புதிய காதல் என பதிவிட்டுள்ளார். அது என்ன வீடியோ என்றால் அவர் Keyboard வாசிக்கும் வீடியோ தான்.
அவரது இந்த புதிய முயற்சிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.