நடிகை சித்ரா
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக மிகவும் வெற்றிகரமாக ஓடிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்து அழகான கதாபாத்திரமாக நடித்து அசத்தியவர் நடிகை சித்ரா.
இந்த தொடருக்கு முன் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த சித்ராவிற்கு பெயர் வாங்கி கொடுத்தது முல்லை கதாபாத்திரம் தான்.
தொடர்ந்து நடித்து வந்த இவர் தன்னை மிகவும் போல்டான பெண்ணாக தான் காட்டி வந்தார், ஆனால் படப்பிடிப்பை முடித்து ஹோட்டல் அறைக்கு சென்றவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
வழக்கின் தீர்ப்பு
சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் குற்றவாளியாக கருதப்பட்டார்.
தற்போது சித்ரா மரண வழக்கில் இருந்து ஹேம்நாத் விடுவிக்கப்பட்டுள்ளார். ஹேம்நாத்திற்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை எனக்கூறி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.