Friday, September 13, 2024
Homeசினிமாசீரியல் நடிகை ரேகா நாயர் காரால் பரிதாபமாக உயிரிழந்த நபர்... பரபரப்பு சம்பவம்

சீரியல் நடிகை ரேகா நாயர் காரால் பரிதாபமாக உயிரிழந்த நபர்… பரபரப்பு சம்பவம்


ரேகா நாயர்

இரவின் நிழல், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா நாயர்.

இவர் இரவின் நிழல் படத்தில் மேலாடை இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

ஒருமுறை தன்னைப்பற்றி தவறாக பேசியதாக கூறி வாக்கிங் சென்ற நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் நடு ரோட்டில் சண்டையில் ஈடுபட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் எம்எல்ஏ ஒருவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார் என்ற சர்ச்சையும் ஏற்பட்டது.


கார் விபத்து


இந்த நிலையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க மஞ்சன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய காரை சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார் ஓட்டுநர் பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது அந்த கார் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். 

சீரியல் நடிகை ரேகா நாயர் காரால் பரிதாபமாக உயிரிழந்த நபர்... பரபரப்பு சம்பவம் | Serial Actress Rekha Nair Car Accident



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments