சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஏகப்பட்ட கலைஞர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கியுள்ளது.
பாடல் திறமை கொண்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று சாதித்து இப்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள்.
கடந்த 2023ம் ஆண்டு சூப்பர் சிங்கர் 9வது சீசன் நடந்து முடிந்தது, இதில் அருணா டைட்டிலை வெல்ல முதல் ரன்னர்அப் பட்டத்தை பிரியா ஜெர்சன் வென்றார்.
தற்போது ப்ரியா ஜெர்சன் வாழ்க்கையில் நடந்த சந்தோஷமான விஷயம் குறித்த தகவல் தான் வந்துள்ளது.
நிச்சயதார்த்தம்
கேரளாவை சேர்ந்த இவர் வெளிநாடுகளுக்கு சென்று இசை பயிற்சி பெற்றுள்ளார். தற்போது இவர் தனது நீண்டநாள் காதலரை கரம் பிடித்துள்ளார். இவர்களுக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ப்ரியா வெளியிட்டுள்ளார். இதோ அழகான ஜோடி,