சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிகம் ரசிகர்களை கொண்டவர். அவருக்கு அடுத்து சமந்தா தான் என தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் பேசி இருக்கிறார்.
Jigra என்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஆலியா பட், சமந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமந்தா
மேடையில் பேசிய இயக்குனர் திரிவிக்ரம், “ரஜினிகாந்த்துக்கு பிறகு சமந்தா தான் என நினைக்கிறேன். அவருக்கு தான் தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.”
“இதை சமந்தா மீது இருக்கும் அன்பிற்காக மட்டும் சொல்லவில்லை. முழு மனதுடன் சொல்கிறேன்.”
“சமந்தா தெலுங்கிலும் கவனம் செலுத்த வேண்டும். அவர் ஓகே சொன்னால் அவருக்காக படங்கள் கொண்டு வர ரெடி” என அவர் கூறி இருக்கிறார்.