சூப்பர் சிங்கர்
பாடல் பாடுவதில் மிகுந்த ஆசை கொண்டவர்களுக்கு சிறந்த மேடையாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் உள்ளது.
பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி இந்த பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடைசியாக பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் 10வது சீசன் நடந்தது.
இந்த 10வது சீசனை ஜான் ஜெரோம் என்ற இளைஞர் வெற்றிப்பெற்றார், 2வது இடத்தை ஜீவிதா என்பவரும், 3வது இடத்தை வைஷ்ணவி என்பவரும் பிடித்தனர்.
ஜீவிதா பேட்டி
நிகழ்ச்சி முடிந்த கையோடு ஜான் ஜெரோம் மற்றும் ஜீவிதா இருவரும் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் ஜீவிதாவிடம் உங்களுக்கு நிறைய Proposal வந்திருக்கும் இல்லையா, அதில் ஏதாவது ஒன்று சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு ஜீவிதா, தனக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் அனுப்பிய மெசேஜ்ஜில் உங்க வீடு எங்க இருக்கு வந்து பொண்ணு கேட்கிறோம் என்று மெசேஜ் வந்திருந்ததாக ஓபனாக கூறியுள்ளார்.