கங்குவா – வேட்டையன்
சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டும் ஒரே நாளில் வெளியானால் நடிகர்கள் சண்டை போட்டு கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் அந்த குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் கண்டிப்பாக சண்டை போட்டு கொள்வார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் படமும் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படமும் வரும் அக்டோபர் 10 – ம் தேதி வெளிவர இருந்தது.
கங்குவா படம் பற்றி பேசிய ரஜினி
இதற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், சமீபத்தில் கார்த்தி நடித்த மெய்யழகன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சூர்யா, தான் நடித்த கங்குவா படம் அக்டோபர் 10 வெளிவரப்போவது இல்லை என்று அறிவித்தார்.
அதுகுறித்து பேசிய சூர்யா, நடிகர் ரஜினிகாந்த் மீது வைத்துள்ள மரியாதை காரணமாக வேட்டையன் படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டு உள்ளது என்ற தகவலை கூறினார். இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தாலும் அவர் எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், கூலி படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற ரஜினியிடம் சூர்யாவின் இந்த செயல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் சூர்யா என்மீது வைத்துள்ள அன்புக்கும், பாசத்திற்கும் மிகவும் நன்றி, மேலும் கங்குவா படம் மாபெரும் வெற்றி அடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.