சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் ராஜ்குமார் பெரிசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே. 23 படத்தின் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சென்சேஷனல் இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணையப்போகிறார் என தகவல் வெளிவந்தது.
சுதா கொங்கரா மற்றும் சூர்யா இருவரும் சூரரை போற்று படத்திற்கு பின் புறநானூறு எனும் படத்தில் இணைந்தனர். ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டுவிட்டது, சூர்யா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்பது போல் பல தகவல்கள் வெளிவந்தது.
சூர்யா இடத்தில் சிவகார்த்திகேயன்
படம் கைவிடப்படவில்லை, இப்படத்திலிருந்து சூர்யா மட்டும் வெளியேறியுள்ளார் அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோ அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. இந்த நிலையில், சூர்யாவிற்கு பதிலாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
ஏறக்குறைய இது உறுதியாகிவிட்டது என்றும், விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.