Monday, March 24, 2025
Homeசினிமாசூர்யா ஒரு பொய்க்காரர்.. ரகசியத்தை போட்டுடைத்த தம்பி கார்த்தி

சூர்யா ஒரு பொய்க்காரர்.. ரகசியத்தை போட்டுடைத்த தம்பி கார்த்தி


சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா முதன் முதலாக நடித்து வரும் 14 – ம் தேதி வெளிவரும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கும் இந்த படத்தின் புரொமோஷன் வேலைகள் தீவிரமாக மும்பை, ஹைதராபாத், சென்னை என படக்குழுவினர் மாறி மாறி செய்து வருகின்றனர்.

 ரகசியம் 

இந்நிலையில், படத்தின் புரொமோஷனுக்காக ஹைதராபாத் சென்ற போது அங்கு நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா கலந்து கொண்டுள்ளார்.

அப்போது நிகழ்ச்சியில் சூர்யாவிடம் பல கேள்விகளை கேட்டு பாலகிருஷ்ணா நகைச்சுவையாக கலைத்துள்ளார்.

அதில், ” உங்கள் முதல் காதல் குறித்து சொல்லுமாறு சூர்யாவிடம் கேட்க அதற்கு சிரித்து கொண்டு வேண்டாம் சார் வீட்டில் பிரச்சனை ஆகி விடும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

அதன் பின், சூர்யாவின் தம்பியான கார்த்திக்கு போன் செய்து பாலகிருஷ்ணா, தற்போது உங்கள் அண்ணன் நிறைய பொய் சொன்னார் என்று கூற, அதற்கு கார்த்தி அவர் சிறு வயது முதல் அப்படி தான் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

சூர்யா ஒரு பொய்க்காரர்.. ரகசியத்தை போட்டுடைத்த தம்பி கார்த்தி | Karthi Shares Secret About Suriya

மேலும், உங்களை பற்றிய சில ரகசியங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வீர்கள்? என்று கேட்க, சூர்யா பதற்றத்துடன் கார்த்தி குறித்து ஜோதிகாவிடமும், ஜோதிகா குறித்து என்று பாதியில் நிறுத்திவிட்டார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments