சூர்யா
தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
இந்த படத்திற்கு பின் சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு என்ற படத்தில் நடிக்கவிருந்தார். இப்படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிப்பதுடன் ஹிந்தி மொழி திணிப்பு எதிராக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
எகிறும் எதிர்பார்ப்பு!
சமீபத்தில் சூர்யா சுதா கொங்கரா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும். அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.
இந்நிலையில் புறநானூறு படத்தில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டி வருவதாக சினிமா பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவன் கெட்டப்பில் சூர்யாவை காட்டிலும் தனுஷுக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.