Tuesday, February 11, 2025
Homeசினிமாசூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அவரே உறுதிப்பட கூறிய தகவல்

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அவரே உறுதிப்பட கூறிய தகவல்


ஸ்ரேயா சரண்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துள்ளார்.

ஸ்ரேயா கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்தில் நடித்தார். பின் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி கொண்டார்.

இந்நிலையில், சுமார் 7 வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யாவின் 44 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். இது தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது இதனை நடிகை ஸ்ரேயா சரண் அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஸ்ரேயா சரண் பேட்டி

அதில், “நான் சூர்யாவின் 44 – வது படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளேன். அந்த பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது. விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார். ஸ்ரேயா சூர்யாவுடன் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. அவரே உறுதிப்பட கூறிய தகவல் | Actress Joined In Suriya 44 Movie          

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments