Wednesday, November 6, 2024
Homeசினிமாசூர்யா 45 - வது படம் குறித்து வெளிவந்த அப்டேட்.. RJ பாலாஜி வெளியிட்ட புகைப்படம்

சூர்யா 45 – வது படம் குறித்து வெளிவந்த அப்டேட்.. RJ பாலாஜி வெளியிட்ட புகைப்படம்


சூர்யா 45

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகனாக வலம் வரும் சூர்யா ஏற்கனவே கங்குவா படத்தை முடித்துவிட்டு அவரது அடுத்த படமான சூர்யா 44ல் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குகிறார்.

கங்குவா படம் நவம்பர் 14 – ம் தேதி வெளிவர உள்ள நிலையில், சூர்யா நடித்துள்ள 44வது படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படங்களை தொடர்ந்து, அடுத்து சூர்யா யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யாவின் 45 – வது படத்தை RJ பாலாஜி இயக்கப்போவதாக தகவல்கள் இதற்கு முன்பு வெளிவந்தது.

புகைப்படம் 

இந்நிலையில், RJ பாலாஜி அவரது இன்ஸ்டா பக்கத்தில் சுற்றுலாவில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘Team RJB’ என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யா 45 - வது படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்.. RJ பாலாஜி வெளியிட்ட புகைப்படம் | Suriya Next Film Update By Rj Balaji

அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அனைவரும், சூர்யாவின் 45 – வது படத்தின் பணிகளில் RJ பாலாஜி இறங்கிவிட்டார். படத்தின் லொகேஷன் தேர்வு செய்வதற்காக தான் அங்கு சென்றுள்ளார் என்று கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது. 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments