நடிகர் தனுஷ்
தனுஷ் தற்போது ஒரு பக்கம் ஹீரோவாகவும், மறுபக்கம் இயக்குனராகவும் பிஸியாக வலம் வருகிறார். ராயன் படத்தில் இயக்கி நடித்திருந்த தனுஷ் அடுத்ததாக இட்லி கடை படத்திலும் நடித்துக்கொண்டே இயக்கி வருகிறார்.
இதற்கிடையில் குபேரா, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை முடித்துள்ளார். மேலும் இவர் கைவசம் இளையராஜா, Tere Ishk Mein ஆகிய படங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சேஷனல் இயக்குனருடன் கூட்டணி
இந்த நிலையில், தனுஷின் லைன் அப் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்று லப்பர் பந்து.
இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இட்லி கடை படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான் இப்படத்தையும் தயாரிக்கப்போகிறார் என பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று.