மமிதா பைஜூ
தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகியாக மாறியுள்ளார் மமிதா பைஜூ. மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமலு படத்தின் மூலம் சென்சேஷனல் நடிகையாகிவிட்டார்.
2017ல் தனது திரை பயணத்தை துவங்கிய இவருக்கு கோ-கோ, சூப்பர் சரண்யா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மலையாளத்தில் கலக்கிக்கொண்டிருந்த நடிகை மமிதா பைஜூ, இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார்.
ஆனால், சில காரணங்களால் பின் அப்படத்திலிருந்து விலகி விட்டார்.
இதன்பின் ஜி.வி. பிரகாஷின் ரெபெல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக மமிதா பைஜூ தான் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி பருவ புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை மமிதா பைஜூவின் பள்ளி பருவ புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..