சிம்பு
முன்னணி ஹீரோவான சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 60% சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. முதல் பாதிக்கான டப்பிங் வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இதை முடித்தபின் STR 48 திரைப்படத்தில் சிம்பு நடிக்கவிருந்த நிலையில், தற்போது அப்படம் ராஜ் கமல் நிறுவனத்திடம் இருந்து கைமாறிவிட்டது. அப்படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்து நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளார்.
சென்சேஷனல் இயக்குனருடன் கூட்டணி
இந்த நிலையில், தற்போதைய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், சிம்பு அடுத்ததாக மலையாளத்தில் சென்சேஷனல் ஹிட் கொடுத்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவருடன் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்பது போல் பேசப்படுகிறது.
மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் மட்டுமே ரூ. 150 கோடி முதல் ரூ. 180 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கும் என்கின்றனர்.
இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 2018 திரைப்படம் மாபெரும் அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.