பாரம்பரிய திருவிழா
தமிழ் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் சென்னையில் செப்டம்பர் 27, 28, 29 ஆகிய நாட்கள் ஒரு கிராமத்து திருவிழா நடைபெறுகிறது. இதனை நடிகரும், உழவன் பவுண்டேஷன் நிருவனருமனா கார்த்தி தொடங்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினை பொருட்கள்,மாட்டு வண்டி என 200 -க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் கார்த்தி பேச்சு
இந்த விழாவை தொடங்கி வைத்த கார்த்தி இதுகுறித்து பேசுகையில், “கோடை விடுமுறை வந்து விட்டாலே எப்போது ஊருக்கு போவோம் என்று ஆசையாக இருக்கும். திரும்பி வர கூட மனம் இருக்காது.
அதை எடுத்துக்காட்டும் வகையில் மெய்யழகன் கதை அமைந்தது. சென்னையில் இதுபோன்ற ஒரு திருவிழா நடைபெற்று நீண்ட காலங்கள் ஆனது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற ஒரு விழா நடப்பது அரிது அதனால் கண்டிப்பாக என்னுடைய குடும்பத்தாரையும் குழந்தைகளையும் இங்கு வரவழைக்க உள்ளேன். இந்த திருவிழாவை அவர்கள் இழந்து விடக்கூடாது.
மேலும், ஜல்லிக்கட்டு நடத்த பல உரிமைகளை வாங்க வேண்டி உள்ளது. ஆனால், சென்னையில் நடத்தினால் அதில் பலர் கலந்து கொள்வார்கள். ஜல்லிக்கட்டு என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை மெய்யழகன் படத்தின் போது தான் நான் தெரிந்துகொண்டேன்” என்று கூறியுள்ளார்.