வேட்டையன் படம்
ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.
சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஞானவேல் வேட்டையன் படத்தை இயக்க இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
எல்லோரும் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, அதாவது வேட்டையன் படம் இன்று படு மாஸாக வெளியாகிவிட்டது.
ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவருமே படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
பட வசூல்
திரையரங்குகளில் முதல் நாள் வெற்றிகரமாக ரஜினியின் வேட்டையன் படம் ஒளிபரப்பாகி வர படத்தின் முதல்நாள் சென்னை வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
முதல்நாள் சென்னையில் மட்டுமே இப்படம் ரூ. 2.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.