Sunday, December 8, 2024
Homeசினிமாசெப்டம்பர் மாதம் OTT - யில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

செப்டம்பர் மாதம் OTT – யில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ


இந்த மாதம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் குறித்தும் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை குறித்தும் கீழே காணலாம்.

ரகு தாத்தா:

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ரகு தாத்தா. இந்த படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியாகும் என அந்த OTT தளம் அறிவித்தனர்.

வாழை :

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரின் உண்மை வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வாழை. கடந்த 23 – ம் தேதி வெளிவந்த இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் செப்டம்பர் 27 -ம் தேதி வெளிவர உள்ளது என கூறப்படுகிறது.

தங்கலான் :

விக்ரம் ஹீரோவாக ஒரு புதுமையான ரோலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்த படம் தங்கலான் ஆகஸ்ட் 15 – ம் தேதி வெளிவந்த இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் செப்டம்பர் 20 – தேதி வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.

ஸ்ட்ரீ – 2:

பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்து வசூலில் மாஸ் காட்டிய படம் ஸ்ட்ரீ – 2. ஆகஸ்ட் 15 வெளிவந்த இந்த படம் Amazon Prime தளத்தில் வரும் 27 – தேதி வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.

டிமான்ட்டி காலனி 2 :

அருள்நிதி நாயகனாக நடித்து வெளிவந்த திகில் – திரில்லர் திரைப்படம் டிமான்ட்டி காலனி 2. ஆகஸ்ட் 15 வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த இந்த படம் Zee5 தளத்தில் வரும் செப்டம்பர் 27 – ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தனர். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments