Tuesday, February 18, 2025
Homeசினிமாசொந்தமாக சொகுசு கப்பல் வாங்கியுள்ளாரா சீரியல் நடிகை ஆல்யா மானசா?... எத்தனை கோடி தெரியுமா?

சொந்தமாக சொகுசு கப்பல் வாங்கியுள்ளாரா சீரியல் நடிகை ஆல்யா மானசா?… எத்தனை கோடி தெரியுமா?


ஆல்யா மானசா

ஆல்யா மானசா, தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை.

மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் மீடியாவில் என்ட்ரி கொடுத்து பிரபலமாக அப்படியே விஜய் டிவி பக்கம் வந்து ராஜா ராணி தொடர் நடித்தார். முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தொடர்ந்து சீரியல்கள் நடிக்கிறார்.

கடைசியாக சன் டிவியில் இனியா தொடர் நடித்து வந்தார் தற்போது தொடர் முடிவுக்கு வந்துவிட்டது.


புது பிசினஸ்

சஞ்சீவை திருமணம் செய்தவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சமீபத்தில் இவர்கள் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்று கட்டினர், அவர்களின் புது வீட்டை கூட சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் Exclusiveஆக காட்டி இருந்தோம்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸ் மிகவும் பிரபலம், அங்குள்ள போட் ஹவுஸில் விடுமுறையை கழிக்க இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் வருகிறார்கள்.

போட் ஹவுஸில் தங்க ஒரு நாளைக்கே ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகிறதாம். ஆல்யா மானசா தற்போது சொந்தமாக போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். அந்த போட் ஹவுஸின் விலை ரூ. 2 கோடியாம்.

அதில் நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், பிரம்மாண்ட டைனிங் ஹால் என எல்லா வசதிகளும் உள்ளதாம். புது பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ள ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

சொந்தமாக சொகுசு கப்பல் வாங்கியுள்ளாரா சீரியல் நடிகை ஆல்யா மானசா?... எத்தனை கோடி தெரியுமா? | Alya Manasa Buys Boat House In Kerala



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments