Friday, January 17, 2025
Homeசினிமாசோகத்தில் ஆழ்த்தும் வயநாடு நிலச்சரிவு சம்பவம்... பண உதவி செய்த பகத் பாசில், நஸ்ரியா

சோகத்தில் ஆழ்த்தும் வயநாடு நிலச்சரிவு சம்பவம்… பண உதவி செய்த பகத் பாசில், நஸ்ரியா


வயநாடு சம்பவம்

இயற்கை அழகு கொஞ்சும் கேரளாவின் வயநாடு பகுதியை இப்போது பார்க்கவே அனைவருக்கும் மனது கஷ்டமாக உள்ளது.

நிலச்சரிவால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அன்றாடம் வரும் இறப்பு செய்திகள் எல்லோரின் மனதையும் உலுக்கியுள்ளது.

வயநாடு நிலச்சரிவு பேரழிவை சரிசெய்ய முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன.


பிரபலங்கள்

நடிகர்கள் சூர்யா-ஜோதிகா, கார்த்தி ஆகியோர் ரூ. 50 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சமும், நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 10 லட்சமும் கொடுத்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 5 கோடி, அதிமுக சார்பில் ரூ. 1 கோடி என நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மலையாள சினிமாவின் டாப் ஜோடியான பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் சேர்ந்து கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளனர். 

சோகத்தில் ஆழ்த்தும் வயநாடு நிலச்சரிவு சம்பவம்... பண உதவி செய்த பகத் பாசில், நஸ்ரியா | Nazriya Fahadh Faasil Donation For Wayanad



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments