Monday, February 17, 2025
Homeசினிமாசௌந்தர்யாவை ஜெயிக்கவைக்க காதலர் விஷ்ணு செய்யும் மோசடி.. நடிகை சனம் ஷெட்டி புகார்

சௌந்தர்யாவை ஜெயிக்கவைக்க காதலர் விஷ்ணு செய்யும் மோசடி.. நடிகை சனம் ஷெட்டி புகார்


பிக் பாஸ் 8ம் சீசன் தமிழில் தற்போது ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த வாரம் தான் ஷாவின் இறுதி வாரம் என்பதால் டைட்டில் வின்னர் யார் என்பதை வாக்கெடுப்பு மூலமாக தேர்வு செய்ய இருக்கின்றனர்.

ரசிகர்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். போட்டியாளர்களுக்கு வாக்களிக்க மிஸ்டு கால் கொடுத்தும் வாக்களிக்கலாம். ஒவ்வொரு போட்டியாளருக்கும் அதற்காக நம்பர் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சௌந்தர்யா காதலர் விஷ்ணு செய்யும் மோசடி?

பைனலில் இருக்கும் போட்டியாளர்களின் ஒருவரான சௌந்தர்யாவின் மீது ஏற்கனவே PR வைத்திருப்பதாக ட்ரோல்கள் இருந்து வருகிறது. பலரும் அதை பிக் பாஸ் வீட்டிலிலே கூறி அவரை இதற்கு முன் தாக்கி பேசி இருக்கிறார்கள்.

இந்நிலையில் இறுதி வாரத்தில் சௌந்தர்யாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்க, அவரது காதலர் விஷ்ணு ஒரு மோசடி வேலை செய்து வருகிறார் என பிரபல நடிகை சனம் ஷெட்டி புகார் கூறி இருக்கிறார்.

சௌந்தர்யாவுக்கு வாக்கு அளிக்கும் மிஸ்டு கால் போன் நம்பரை எடுத்து தனது இன்ஸ்டா followersகளுக்கு அனுப்பி “Urgent.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க” என மெசேஜ் அனுப்புகிறாராம் விஷ்ணு.

மற்றவர்களும் அதை நம்பி போன் செய்தால் அது பிக் பாஸ் voting நம்பர் என்பது பிறகு தான் தெரியவருகிறது. இப்படி விஷ்ணு scam செய்வதாக நடிகை சனம் ஷெட்டி புகார் கூறியுள்ளார்.
 

Gallery



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments