Tuesday, February 11, 2025
Homeசினிமாஜாலியா ஜிம்கானா: திரை விமர்சனம்

ஜாலியா ஜிம்கானா: திரை விமர்சனம்


பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜாலியா ஜிம்கானா’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்



பவானியின் குடும்பம் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகிறார்கள். எம்.எல்.ஏவிடம் இருந்து பெரிய ஆர்டர் அவர்களுக்கு கிடைக்கிறது.


ஆனால், அதற்கான பணத்தை தராமல் எம்.எல்.ஏவின் ஆட்கள் பவானியின் தாத்தாவை தாக்க, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்டுகிறார்.

ஜாலியா ஜிம்கானா: திரை விமர்சனம் | Jolly O Gymkhana Movie Review

கடையை நடத்த முடியாமல் பவானி தவிக்க, தாத்தாவின் யோசனைப்படி வழக்கறிஞர் பூங்குன்றனின் உதவியை நாடி பவானியின் குடும்பம் செல்கிறது.


அங்கு அவரை யாரோ கொலை செய்துவிட, தங்கள் மேல் கொலைப்பழி விழுந்துவிட்டதோ என பயந்து அவரது உடலை வெளியேற்ற பவானியின் குடும்பம் முயற்சிக்கிறது. அதன் பின்னர் நடக்கும் காமெடி கலாட்டா தான் இந்த ஜாலியா ஜிம்கானா.  

படம் பற்றிய அலசல்



பிரபுதேவா படம் முழுவதும் சடலமாக நடித்து மிரட்டியிருக்கிறார். அவரது கதாபாத்திரம் ஒரு நல்ல காரியம் செய்ய முயற்சிக்கும்போது கொல்லப்படுவது ஹார்ட் டச்சிங்.


படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குநர் லாஜிக் பார்க்காமல் ஜாலியாக படம் பார்க்குமாறு வாய்ஸ் ஓவரில் கூறுகிறார். அதனால் நாம் எங்குமே லாஜிக் மிஸ்டேக் குறித்து கேள்வி கேட்க கூடாது போல.

ஜாலியா ஜிம்கானா: திரை விமர்சனம் | Jolly O Gymkhana Movie Review

யோகி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அதேபோல் தான் ஜான் விஜய், ரோபோ ஷங்கர், எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரங்களும்.

எல்லோரும் நம்மை சிரிக்க வைக்க ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள்.

ஆனால் அபிராமி அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுகிறார்.

மடோனாவை விட அபிராமி தான் படத்தின் பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார்.

அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசை உறுத்தல் இல்லை.

ஜாலியா ஜிம்கானா: திரை விமர்சனம் | Jolly O Gymkhana Movie Review

‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா’ பாடல் ஆட்டம்போட வைக்கிறது.

திரைக்கதை தொய்வாக ஆரம்பிக்கும்போதெல்லாம் யோகிபாபு நாம் கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்டு சரி செய்கிறார். 

க்ளாப்ஸ்



காமெடி காட்சிகள்



பின்னணி இசை



பிரபுதேவாவின் (அமைதியான) நடிப்பு


பல்ப்ஸ்



இயக்குநரே கூறினாலும் லாஜிக் மிஸ்டேக்ஸ் உறுத்தத்தான் செய்கிறது



மொத்தத்தில் பெரிதளவில் வாய்விட்டு சிரிக்க வைக்கவில்லை என்றாலும், கிரிஞ்ச் இல்லாமல் ரசிக்க வைக்க முயற்சித்திருப்பதால் ஒருமுறை பார்க்கலாம் இந்த ஜாலியா ஜிம்கானாவை.  

ஜாலியா ஜிம்கானா: திரை விமர்சனம் | Jolly O Gymkhana Movie Review

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments