Tuesday, February 11, 2025
Homeசினிமாஜீப்ரா திரை விமர்சனம்

ஜீப்ரா திரை விமர்சனம்


தெலுங்கு சினிமாவில் தற்போது நியூ ஜென் இயக்குனர்கள் பலம் களம் இறங்கி தரமான பொழுதுபோக்கு படங்களை கொடுக்க அந்த வகையில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் வெளிவந்துள்ளது ஜீப்ரா எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.

கதைக்களம்


ஹீரோ சூர்யா ஒரு பேங்-ல் உயர் பதவியில் இருக்கிறார், அப்போது அவருடைய காதலி ப்ரியா பவானி ஷங்கர் ஒரு சிறு தவறால் வேறு ஒருவரின் அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்புகிறார்.


இதனால் உண்மையான அக்கவுண்ட்க்கு போக வேண்டிய 4 லட்சத்த ஹீரோ தன் சாமர்த்தியத்தால் மீண்டும் பெற்று ப்ரியா பவானி ஷங்கரை காப்பாற்றுகிறார்.


ஆனால், இது முடிந்த சில நிமிடங்களிலேயே சூர்யா அக்கவுண்டில் 5 கோடி பணம் வந்து, உடனே அந்த அக்கவுண்ட் ப்ரீஸ் ஆகி, வேறு பலருக்கும் அந்த 5 கோடி பிரிந்து செல்கிறது.



பிறகு தான் தெரிகிறது அந்த 5 கோடி ஆதி என்ற பிசினஸ் மேக்னேட்-ன் பணம், அந்த 5 கோடி அவர் இழந்ததை அறிந்து அவரின் 800 கோடி பிஸினஸ் செய்ய வந்த சுனில் கிண்டல் செய்கிறார்.


இதனால் ஆதி இதை ஒரு ஈகோ க்ளாஸாக மனதில் வைத்துக்கொண்டு, சூர்யாவிடம் நீ தான் அந்த 5 கோடியை கொடுக்க வேண்டும், அதுவும் 4 நாளில் என கட்டளையிட, அதன் பின் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே இந்த ஜீப்ரா..  

படத்தை பற்றிய அலசல் 

சூர்யாவாக நடித்துள்ள சத்யதேவ் தான் இழந்ததை மீட்க, அவர் செய்யும் சாகசமே இந்த படம், ஆம் சாகசம் என்று தான் சொல்ல வேண்டும், ஒரு தனி ஆளாக ஒரு பேங்-யை கொள்ளையடித்து ஆதி(தனஞ்செயன்)க்கு வரவேண்டிய பணத்தை கொடுக்க போராடுகிறார்.

ஜீப்ரா திரை விமர்சனம் | Zebra Movie Review

இதற்காக இயக்குனர் லாஜிக் என்பதை கண்ணை மூடிக்கொண்டு வெறும் சுவாரஸ்யம் மட்டும் இருந்தால் போதும் என்று மனதில் வைத்து எடுத்துள்ளார்.

இதில் சூர்யா போஷன் வரும் போதெல்லாம் நாமும் ஆர்வமுடன் கதையில் ஒன்றி போக முடிகிறது, ஆனால், அப்படியெர் தனஞ்செயன் கேரக்டர் வரும் போது நாம் வேறு படத்தில் இருக்கிறோமோ என்ற எண்ணம் வருகிறது.

ஜீப்ரா திரை விமர்சனம் | Zebra Movie Review

லக்கி பாஸ்கர் போல் பேங்-யை சுற்றியே கதை சென்றிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும், ப்ரியா பவானி ஷங்கர் கதாபாத்திரம் அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

ஆனால், சத்யராஜ் கதாபாத்திரம் அழுத்தம் இல்லாமல் எதோ ஒரு திருப்புமுனைக்கு வேண்டுமென்றே வைத்தது போல் இருக்கிறது.

ஒளிப்பதிவு கொஞ்சம் சுமார் ரகமே, பின்னணி இசை நன்றாக இருந்தாலும், பாடல் ஒன்று பொறுமையை சோதிக்கிறது.

க்ளாப்ஸ்



படத்தின் திரைக்கதை


பேங் சம்மந்தப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள்



பல்ப்ஸ்


பேங்க் கொள்ளை காட்சிகளை இன்னும் லாஜிக் உடன் செய்திருக்கலாம்.


படத்தின் ரன்னிங் டைம்.


மொத்தத்தில் சில லாஜிக் மீறல்கள்களை பொறுத்துக்கொண்டால் ஒரு டீசண்ட் படமாக காண முடிகிறது இந்த ஜீப்ரவை. 

ஜீப்ரா திரை விமர்சனம் | Zebra Movie Review

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments