சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இப்போது கதையில் முத்து-மீனா, சீதா டிகிரி வாங்கிய சந்தோஷத்தில் உள்ளார்கள்.
இன்னொரு பக்கம் மனோஜ் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள Credit Card வாங்கி சிக்கலில் சிக்க இருக்கிறார், அது எப்படிபட்ட பிரச்சனையாக வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ரோஹினி கிரிஷ் விஷயத்தில் இருந்து தப்பிக்க தான் கர்ப்பமாக ஆனால் தான் அது முடியும் என யோசிக்கிறார்.
அதற்காக மருத்துவமனை சென்று செக்அப் செய்கிறார்.
நாளைய புரொமோ
சிம்பிளான கதைக்களத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், ரோஹினி மனோஜிடம் கர்ப்பம் ஆகவில்லை, இதனால் ஒரு சின்ன செக்அப் செய்யலாமா என கேட்கிறார்.
ஆனால் மனோஜ் நான் நன்றாக இருக்கிறேன், அதெல்லாம் தேவையில்லை என்கிறார். உடனே ரோஹினி, நீயும் ஜீவாவும் ஒன்றாக இருந்தபோது அவள் கர்ப்பமானாளா என கோபமாக கேட்கிறார்.