Black
தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவர் ஜீவா. இவர் நடிப்பில் கடந்த 11ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் Black. இப்படத்தை இயக்குனர் பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார்.
மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். வேட்டையன் படம் 10ஆம் தேதி வெளிவந்த நிலையில், இப்படத்தை 11ஆம் தேதி வெளியிட்டனர்.
வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் ஜீவா என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வசூல்
இந்த நிலையில், Black திரைப்படம் வெளிவந்து 2 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் Black படத்திற்கு வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.