கார்த்திகை தீபம்
ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம்.
கடந்த 2022ம் ஆண்டு கார்த்திக் ராஜ் மற்றும் அர்த்திகா நடிக்க இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் திடீரென கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
முதல் பாகம் முடிந்த அதே வேகத்தில் 2ம் சீசனை தொடங்கினார்கள். இதில் கார்த்திக் ராஜ் மற்றும் வைஷ்ணவி சதீஷ் ஆகியோ நாயகன் நாயகியாக நடித்து வருகிறார்கள்.
புதிய என்ட்ரி
அடுத்தடுத்து பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இப்போது நடிகர் ஒருவர் புதிய என்ட்ரி கொடுக்கிறார். நடிகர் நவீன் கிஷோர் தான் நவீன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்குகிறாராம்.