நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அர்ஜுன்.
கன்னடத்தில் முதலில் நாயகனாக அறிமுகமாகிய இவர் பிறகு தான் தமிழ் பக்கம் வந்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான ஜென்டில்மேன், ரிதம், முதல்வன், ஏழுமலை, ஜெய்ஹிந்த் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி அடைந்தன.
இப்போது நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தில் நடித்து முடித்தவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் செம பிஸியாக இருந்தார்.
புதிய தகவல்
ஏற்கெனவே ஜீ தமிழில் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ஜுன் இப்போது மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கூடிய விரைவில் சீரியலில் களமிறங்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த முறை சின்னத்திரையில் களமிறங்கும் அர்ஜுன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் சீரியல் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை, ஆனால் சமூக வலைதளங்களில் இந்த தகவல் வலம் வருகிறது.