தொலைக்காட்சி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சிகளாக உள்ளது சன், விஜய் மற்றும் ஜீ தமிழ்.
3 தொலைக்காட்சியுமே மக்களிடம் பிரபலம் என்றாலும் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் தான் டிஆர்பியில் அதிகம் இடம்பெறும்.
இதனாலேயே 3 தொலைக்காட்சியும் டிஆர்பி கிங்காக மாற புத்தம் புது சீரியல்கள், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை களமிறக்கி வருகிறார்கள்.
புதிய தொடர்
கடந்த சில நாட்களாக சன் மற்றும் விஜய் டிவியில் நிறைய தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. சில அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிட்டது, ஒரு சில வதந்தியும் வைரலாகிறது.
இந்த நிலையில் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகப்போகும் புத்தம்புதிய தொடர் குறித்து தகவல் வந்துள்ளது. மகிழ்மீடியா தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய தொடருக்கு மௌனம் பேசியதே என பெயரிட்டுள்ளனர்.
தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.