டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. சன் டிவி மற்றும் விஜய் டிவியில் அதிகம் தொடர்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
தற்போது ஜீ தமிழும் இந்த ரேஸில் இணைந்து இருக்கிறது.
டப்பிங் சீரியல்
தற்போது ஒரு ஹிந்தி சீரியலை டப்பிங் செய்து தமிழில் ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ்.
Pyaar Ka Pehla Adhyaya: Shiv Shakti என்ற ஹிந்தி சீரியல் தான் தமிழில் டப் ஆக இருக்கிறது. அதற்கு “நீ பாதி, நான் பாதி” என டைட்டில் வைத்து இருக்கின்றனர்.
விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிக்கப்பட இருக்கிறது.