ஜீ தமிழ்
வெள்ளித்திரை தாண்டி இப்போது மக்கள் அதிகம் சின்னத்திரை பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்றே கூறலாம்.
அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே அதிகம் இருக்க நினைப்பதால் இந்த மாற்றம் எனறே கூறலாம்.
இதனால் தொலைக்காட்சிகள் மாறி மாறி நிறைய புதுபுது ரியாலிட்டி ஷோக்களை கொண்டு வருவது, சீரியல்கள் புதியதாக களமிறக்குவது என இருக்கிறார்கள்.
சன் மற்றும் விஜய் டிவியை தாண்டி இப்போது ஜீ தமிழ் தொடர்களும் மக்களிடம் நல்ல ரீச் பெற்று வருகின்றன.
புதிய தொடர்
இந்த நிலையில் ஜீ தமிழில் விரைவில் ஒரு புதிய தொடர் வர இருக்கிறதாம். தொடர் வருவதற்கான புரொமோ விரைவில் வெளியாகும் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில் அப்பா பாசத்துக்காக ஏங்குற இவங்க, யாரா இருக்கும் எனவும் பதிவு செய்துள்ளனர். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது பிரபல சீரியல் நடிகை ஸ்ரேயா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.